For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVK மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்?

06:46 AM Sep 12, 2024 IST | Web Editor
 tvk மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (செப்.12) வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப் 23-ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. எனினும், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து கடந்த வாரம் அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படுமென விஜய் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் கடந்த செப். 9-ம் தேதி ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாடு நடைபெறும் நாள் தொடர்பாக, தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு மற்றும் கட்சி குறித்த முக்கிய தகவலை இன்று (செப்.12) காலை 11 மணிக்கு விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தவெகவின் மாநாட்டிற்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதாகவும், எனவே மாநாடு தேதியில் மாற்றம் இருக்கும் எனவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement