ஓடிடியில் கூடுதல் காட்சிகளுடன் 'விடுதலை 2' திரைப்படம் - வெளியாகும் தேதி தெரியுமா?
'விடுதலை 2' திரைப்படம் ஓடிடியில் ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாஸ்டர் பீஸ் படங்களை ரசிகர்களிடம் கொண்டு வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். தற்போது விடுதலை 2 திரைப்படம் டிச.20 அன்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து முக்கிய கதாபாத்திரத்தில் இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.
மேலும் சேத்தன், கென் கருணாஸ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் 'விடுதலை 2' படம் திரையரங்குகளில் இடம்பெற்ற காட்சிகளை விட ஒரு மணிநேரம் கூடுதலாக ஓடிடியில் வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி ஜீ5 - ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.