For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீனாவில் வெளியாக தயாராகும் ’12th Fail’ திரைப்படம்!

12:18 PM Apr 17, 2024 IST | Web Editor
சீனாவில் வெளியாக தயாராகும் ’12th fail’ திரைப்படம்
Advertisement

இந்தியாவில் வெளியாகி மிக பெரிய அளவில் வசூலை ஈட்டிய ’12th Fail’ திரைப்படம்,  தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. 

Advertisement

இந்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் ’12th Fail’.  இந்த திரைப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார்.  தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி,  மேதா சங்கர்,  அன்ஷுமன் புஷ்கர்,  அனந்த் விஜய் ஜோஷி,  கீதா அகர்வால்,  ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி,  விகாஸ் திவ்யாகீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!

இப்படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார்.  ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான ’12th Fail’, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் அனுராக் பதக்கின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 69-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில்,  சிறந்த திரைப்படம்,  சிறந்த இயக்குநர்,  சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு),  சிறந்த திரைக்கதை,  சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் ‘12th Fail’  திரைப்படம் விருதுகளை வென்றது.  இதையடுத்து பிப்.2-ம் தேதி ‘12th Fail’  திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ’12th Fail’ திரைப்படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக,  இந்த திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement