Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#US முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் விமானத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்!

08:53 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது பிறந்தநாளின்போது விமானத்தில் பயணம் செய்தார். அப்போது பயணிகள் அவரை வாழ்த்தியதற்கு, ஜிம்மி கார்ட்டர் நன்றி செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100வது பிறந்தநாளை நேற்று முன்தினம் (அக்.1) கொண்டாடினார். ஜிம்மிக்கு பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அதிபர் பொறுப்பிலிருந்தார். அமெரிக்க அதிபர்களில் நீண்டகாலம் (100) வாழும் அதிபர் என்ற பெருமையையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றுள்ளார்.

உலகெங்கும் பல நாடுகளில் மனித உரிமையை ஊக்குவிக்கவும், வறுமையைத் துடைத்தொழிக்க அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அவரது இந்த சேவையைப் பாராட்டி 2002-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜிம்மி கார்ட்டருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது பிறந்தநாளன்று விமானத்தில் சென்ற ஜிம்மி கார்ட்டருக்கு, அதில் இருந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி செலுத்தி அவர்களை வாழ்த்தி, அவர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார் ஜிம்மி கார்ட்டர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

President Jimmy Carter flies commercial, greets every passenger on the flight. Happy 100, Jimmy.
byu/asiasbutterfly inMadeMeSmile

Tags :
Ex US PresidentflightJimmy Carter
Advertisement
Next Article