Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாக்பூரில் EVM மெஷின்களுடன் பாஜகவினர் பிடிபட்டதாக வீடியோ வைரல் - உண்மை என்ன?

09:50 AM Nov 28, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas News

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பாஜகவினர் சிக்கியதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இது தொடர்பாக உண்மை தன்மையை விரிவாக காணலாம்.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தினத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) கொண்டு சென்ற பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் கையும் களவுமாக பிடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

'vandanaa_bharat_ki_beti' எனும் சமூக ஊடக பயனர் இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்து ” , நாக்பூரில் உள்ள ஜந்தா சௌக் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கையும் களவுமாக பிடித்தனர். இப்போதும் EVM பாதுகாப்பானது என்று சொல்வார்களா? மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் EVMகள் கைப்பற்றப்பட்டுள்ளன. EVM இருப்பதால்தான் மோடி இருக்கிறார். மோடி இருப்பதால்தான் EVM இருக்கிறது” என அந்த வீடியோ பரவியது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் உள்ள பல பயனர்கள் இந்த வீடியோவை இதே போன்ற உரிமைகோரல்களுடன் பகிர்ந்துள்ளனர்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஆய்வு செய்தபோது வைரலான வீடியோவில் EVM இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனத்தின் பதிவு எண் 'MH19BU6027' கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேடப்பட்ட தகவலின்படி , இது மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் பதிவு செய்யப்பட்ட எண் ஆகும். இதேபோல வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியபோது இந்த வீடியோ பல செய்திகளில் வெளிவருவதைக் கண்டோம், அதன்படி நாக்பூரில் தேர்தல் அதிகாரியின் வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்தியதும் அதன்பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட செய்தி அறிக்கைகள் கிடைத்தன.

ஏபிபி லைவ்வின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோ புல்லட்டின், நாக்பூரின் காவல்துறை இணை ஆணையர் நிசார் தம்போலியின் அறிக்கையையும் உள்ளடக்கியது. தம்போலி, “...அவரது காரில் இருந்த EVMபயன்படுத்தாமல் இருப்பு வைக்கப்பட்டது” என தெரிவித்திருந்தார். இதேபோல ANI இன் அறிக்கை , தம்போலியின் சம்பவம் தொடர்பான செய்தியை உறுதிப்படுத்துகின்றன.அதில் அவர், "ஒரிஜினல் EVM கள் எதுவும் சேதமடையவில்லை." என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாக்பூர் துணை ஆட்சியர் (தேர்தல் அதிகாரி) பிரவீன் மஹிரேவை தொடர்பு கொண்டோம், அவர், “தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த EVM, வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட EVM அல்ல” என்று உறுதி செய்தார். இதையடுத்து நாக்பூர் கோட்வாலி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டோம். இது குறித்து போலீஸ் அதிகாரி அதுல் மோகன்கர் நம்மிடம் கூறுகையில், “ தேர்தல் அதிகாரியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.” என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி , தேர்தலுக்குப் பிறகு கிடைக்கும் அனைத்து EVMகள் மற்றும் VVPATகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

வகை A: வாக்களிக்கப்பட்ட EVMகள் மற்றும் VVPATகள்

முதல் வகை EVMகள் மற்றும் VVPATகளை உள்ளடக்கியது, இதன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குப்பதிவு முடிந்ததும் அவை அணைக்கப்படும்.

வகை B: வாக்களிக்கும்போது சேதமடைந்த EVMகள் மற்றும் VVPATகள்

ஒருசில வாக்குகள் பதிவான பிறகு கோளாறு காரணமாக சேதமடையும் EVMகளும் இதில் அடங்கும்.

வகை C: பழுதான வாக்களிக்கப்படாத EVMகள் மற்றும் VVPATகள்

இந்த வகையில், தேர்தலுக்கு முன் பழுதடைந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு மாற்றப்படுகின்றன.

வகை D: பயன்படுத்தப்படாத EVMகள் மற்றும் VVPATகள்

இந்த வகையில் வரும் EVMகள் மற்றும் VVPAT இயந்திரங்கள் செக்டர் அல்லது மண்டல அல்லது ஏரியா மாஜிஸ்திரேட்டின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவை பாதுகாப்பானவை மற்றும் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை.

இது போன்ற கூற்றுகள் இதற்கு முன் மற்ற தேர்தல்களிலும் வைரலாகியுள்ளது. முன்னதாக, லோக்சபா தேர்தலின் போது வாரணாசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது வைரலானது, இதுதொடர்பாக வாரணாசி மாவட்ட துணை தேர்தல் அதிகாரி ரன்விஜய் சிங்கை தொடர்பு கொண்டு கேட்டதில் அவர் எங்களிடம், "தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து EVM களும் வகை D (பயன்படுத்தப்படாத EVMகள் மற்றும் VVPAT கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை தேர்தலில் பயன்படுத்தப்படாது மற்றும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM களுடன் ஒரே Strong Room அவை வைக்கப்படுவதில்லை.


முடிவு:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பாஜகவினர் சிக்கியதாக கூறுவது தவறானது. EVMகளுடன் பிடிபட்டதாக கூறப்படும் வாகனம் மண்டல அதிகாரியின் வாகனம், அதில் பயன்படுத்தப்படாத EVMகள் வைக்கப்பட்டிருந்தன. அவை வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPEVMMaharastraNagpurvideo viral
Advertisement
Next Article