For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Switzerland சாலையில் மனைவியுடன் வாக்கிங் சென்ற முகேஷ் அம்பானி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

10:31 AM Aug 24, 2024 IST | Web Editor
 switzerland சாலையில் மனைவியுடன் வாக்கிங் சென்ற முகேஷ் அம்பானி  இணையத்தில் வைரலாகும் வீடியோ
Advertisement

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானியுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பதிவில்   நீட்டா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்து காணப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் முதல் #Reusable ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

பாதுகாப்பு குழுவினர் யாரும் இன்றி  நீட்டா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி மட்டும் தெருவில் நடந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அம்பானி குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாடுவது வழக்கமான நிகழ்வு. விடுமுறை காலத்தில் அவர்கள் அங்குள்ள ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் தங்குவர்.

சுவிட்சர்லாந்தின் விலை உயர்ந்த தங்கும் விடுதி இது ஆகும். இந்த விடுதியில் அதிகபட்சமாக ஒரு இரவுக்கு மட்டும் ரூ.62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதியில் மொத்தம் நான்கு ஹோட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், பத்து உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன.

Tags :
Advertisement