உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? - Fact Check
This News Fact Checked by ‘Factly’
இளைஞர் ஒருவர் தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு இளம் பெண்ணை நடுரோட்டில் கழுத்தை நெரிக்க முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் முஸ்லிம் ஆண் ஒருவர் தனது காதலை நிராகரித்ததால், ஒரு இந்து பெண்ணைக் கொல்ல முயன்றதாக வீடியோவுடன் உள்ள கூற்று தெரிவிக்கிறது. சமூல வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள கூற்றை உண்மை-சரிபார்ப்போம்.
உண்மைச் சரிபார்ப்பு :
வைரலான பதிவுகளை நம்பகத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தை தேடலுக்கு உட்படுத்தியபோது இந்தத் தேடலில் ஒரே காட்சிகளைக் கொண்ட பல செய்தி அறிக்கைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றது. ( அதன் லிங்கை இங்கே , இங்கே , இங்கே , இங்கே மற்றும் இங்கே காணலாம்). இந்த அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் 04 ஜனவரி 2025 அன்று உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கஜ்ரௌலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேலம்பூர் கோசாயில் நடந்தது என்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் ராகுல் என்று அறிக்கைகள் அடையாளம் காணப்பட்டன. கஜ்ரௌலா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நர்சிங் மாணவி, 04 ஜனவரி 2025 அன்று கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகுல், அம்மாணவியை தடுத்துள்ளார். பின்னர் அவர் கழுத்தில் தாவணியை சுற்றி கழுத்தை நெரிக்க முயன்றார். அருகில் இருந்த சிலர் தலையிட்டு மாணவியை காப்பாற்றினர்.
இதையடுத்து போலீசார் ராகுல் மீது வழக்கு பதிவு செய்து மறுநாள் கைது செய்தனர். அந்த மாணவியுடன் ராகுல் நான்கு வருடங்களாகத் பழகி வந்த நிலையில் மற்றொரு பையனுடன் பேசுவதைக் கண்ட அவர் கோபமடைந்து அம்மாணவியை தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 07, 2025 தேதியிட்ட 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' அறிக்கையின்படி , அம்ரோஹா எஸ்பி குன்வார் அனுபம் சிங் தெரிவித்ததாவது “காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 126(2), 115(2), 76 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ், போக்சோ சட்டத்தின் 7/8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ” என தெரிவித்தார்.
महोदय, कृपया अवगत कराना है कि उपरोक्त प्रकरण में प्राप्त तहरीर के आधार पर अभियोग पंजीकृत है, अभियुक्त को गिरफ्तार कर जेल भेजा जा चुका है। दोनो पक्ष सजातीय हैं तथा पूर्व परिचित हैं। कृपया भ्रामक खबर न फेलाये।
— Amroha Police (@amrohapolice) January 7, 2025
இதேபோல சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் இருப்பதாக அம்ரோஹா போலீசார் தெரிவித்தனர் . குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், சம்பவத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வகுப்புவாதக் கூற்றுடன் பரவி வரும் கூற்றுகளை நிராகரித்த காவல்துறை, சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினர்.
04 ஜனவரி 2025 அன்று உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒரு இளம் பெண்ணை நடுரோட்டில் வைத்து முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. கழுத்தை நெரிக்க முயன்ற சம்பவத்தில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என்றும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்மை சரிபார்ப்பில் தெரிய வந்துள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.