லக்னோவில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்ததாக பரவும் வீடியோ | உண்மை என்ன?
This news Fact Checked by ’India Today’
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர் என சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ வெளியானது. இது தொடர்பான உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
உ.பி.யின் தலைநகரான லக்னோவில் பெரும் ரயில் விபத்து நடந்துள்ளது என்கிற கூற்றுடன் ரயிலில் தீப்பிடித்த வீடியோவை பயனர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில், ஒரு ரயில் பெட்டி எரிந்து அதன் மேல் மற்றொரு பெட்டியுடன் எரிகிறது, மேலும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
பல Facebook மற்றும் Instagram பயனர்கள் இந்த வீடியோவை 26 டிசம்பர் 2024 அன்று லக்னோவில் நடந்த ஒரு விபத்து என பகிர்ந்துள்ளனர்.
உண்மை சரிபார்ப்பு :
ஆஜ்தக் உண்மைச் சரிபார்ப்பில் வைரலான வீடியோ உண்மையான விபத்து அல்ல என்றும் டிசம்பர் 20 அன்று லக்னோவில் நடந்த ரயில்வே விபத்து தொடர்பான பயிற்சியின் வீடியோ என்று கண்டறியப்பட்டது. சமீபகாலமாக லக்னோவில் இதுபோன்ற விபத்து எதுவும் நடக்கவில்லை என்றும் கண்டறிந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் kumar_raidas என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. அதனைக் குறித்து தேடிய பிறகு இந்த அதன் கணக்கு கிடைத்தது. அதன்படி வைரலான வீடியோ டிசம்பர் 20, 2024 அன்று வெளியிடப்பட்டது. வீடியோவில் Descriptionல் இது லக்னோவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான பயிற்சி என்று எழுதப்பட்டுள்ளது. கவனமாகப் பார்த்த போது ஒரு பெட்டியில் தொங்கவிடப்பட்ட பேனரில் ஆங்கிலத்தில் "Mock Drill" என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டோம்.
இந்தத் தகவலின் அடிப்படையில் தேடியதில், லக்னோவில் டிசம்பர் 20-ம் தேதி நடந்த இந்தப் பயிற்சியைப் பற்றிய பல செய்திகள் கிடைத்தன. வைரலான வீடியோவைப் போன்ற படங்களும் இந்த செய்தி அறிக்கைகளில் உள்ளன. லக்னோவில் உள்ள அலம் பாக் ரயில் நிலையத்தில் இந்த பயிற்சி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ரயில் விபத்தை தொடர்பான பயிற்சி பாதுகாப்புப் பணியாளர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. வைரலான வீடியோவின் காட்சிகளைக் காணக்கூடிய ஆஜ் தக்கின் வீடியோ அறிக்கையையும் நாங்கள் கண்டோம். இந்த அறிக்கையின்படி இந்த பயிற்சி NDRF மற்றும் RPF மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தப்பட்டது என்பது உறுதியாகிறது.
இதன்மூலம் லக்னோவில் நடந்த மாக் டிரில் வீடியோ உண்மையான விபத்தாக பகிரப்பட்டு வருவது தெளிவாகிறது. சமீபத்தில் லக்னோவில் இவ்வளவு பெரிய அளவிலான ரயில் விபத்து நடந்ததாக எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை. நவம்பர் 2024 இல் பிகானரில் நடந்த இதேபோன்ற பயிற்சியின் வீடியோவும் உண்மையான விபத்தாக பயனர்களால் பகிரப்பட்டது. இதனைக் குறித்து உண்மை சரிபார்த்து ஆஜ்தக் செய்தி வெளியிட்டிருந்தது. அதை இங்கே படிக்கலாம்.
முடிவு :
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர் என சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ வெளியானது. இதுகுறித்து உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் இந்த வீடியோ உண்மையான விபத்து அல்ல. டிசம்பர் 20 அன்று லக்னோவில் நடந்த ரயில்வே விபத்து தொடர்பான பயிற்சியின் வீடியோ என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சமீபகாலமாக லக்னோவில் இதுபோன்ற விபத்து எதுவும் நடக்கவில்லை என்பதும் உறுதியாகிறது.
Note : This story was originally published by ’India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.