குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என பரவும் வீடியோ போலியானது - இது குறித்து Newschecker கூறுவது என்ன?
This News Fact Checked by Newschecker
குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோ உண்மையல்ல அது கோயம்புத்தூரில் உள்ள அருவி என கண்டறியப்பட்டுள்ளது.
https://x.com/cebi_sweety/status/1791142784755511566
இந்த காணொலியின் மூலம் கன்னியாகுமரி எம்பியாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் செய்திருக்கிறார். அதனால்தான் மேம்பாலம் வழியாக அருவிபோல் நீர் கொட்டுகிறது என இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர்.
உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து நியூஸ் செக்கர் தேடியது.
மேலும் இந்த வீடியோவை வைத்து சில தனியார் செய்தி நிறுவனங்கள் கோவையில் உள்ள மேம்பாலத்தில் நீர் கொட்டும் காட்சி குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
முடிவு :
குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும். எனவே குமரியில் நடந்ததாக பரப்பப்படும் சம்பவம் பொய் என உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சம்பவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
Note : This story was originally published by NewsChecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.