Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’ - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

06:55 AM Jan 01, 2025 IST | Web Editor
Advertisement

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதே ரிலீஸ் தள்ளிப் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட போது அது தொடர்பான போஸ்டர்களில் பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டது லைகா நிறுவனம். அதற்கு பின்பு வெளியான பாடல் மற்றும் அதனை விளம்பரப்படுத்த வெளியிட்ட வீடியோ பதிவுகள், எக்ஸ் பதிவுகள் என அனைத்திலுமே பொங்கல் வெளியீட்டை எடுத்துவிட்டது.

https://twitter.com/LycaProductions/status/1874141005357932592

இந்நிலையில், பொங்கல் வெளியீட்டில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
விடாமுயற்சிajithajith kumaranirudhArjunNew Year 2025News7TamilTrishaVidaa MuyarchiWelcome 2025
Advertisement
Next Article