விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் - அசத்தல் அப்டேட் கொடுத்த #Anirudh!
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அனிருத் புதிய அப்டேடை பகிர்த்துள்ளார்.
மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. இவர்கள் மூவரும் இணைத்து நடித்து இருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சவதீகா(Sawadeeka)’ என்ற பாடல் நாளை (டிச.27) மதியம் 1 மணியளவில் வெளியாகயுள்ளது. இந்த நிலையில் இப்பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் முதல் பாடலை அந்தோனிதாசன் மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடியுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். இது குத்துப்பாடல் போன்று இப்பாடல் இருக்கும் எனவும் அனிருத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அனிருத் பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.