வெளியானது விடாமுயற்சியின் 'பத்திகிச்சு' பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள் !
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "சவதீகா" பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த டிரைலரில் இடம்பெற்ற ராப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான ' பத்திகிச்சு ' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.