For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘விடாமுயற்சி' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - சென்னை திரும்பிய அஜித்!

07:22 PM Nov 24, 2023 IST | Web Editor
‘விடாமுயற்சி  முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு   சென்னை திரும்பிய அஜித்
Advertisement

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், ஓய்வுக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ம் தேதி தொடங்கியது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். படப்பிடிப்பு துவங்கி பத்து நாள் கூட ஆகாத நிலையில் இஸ்ரேல் நாட்டில், போர் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் அஜர்பான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஓய்விற்காக அவர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement