Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
08:46 AM Aug 23, 2025 IST | Web Editor
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement

நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 46 பேர் 68 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 19 பேரின் 28 வேட்பு மனுக்கள் தேர்தல் சட்டத்தின் கீழ் தொடக்கத்திலே நிராகரிக்கப்பட்டது.

Advertisement

இறுதியில் 27 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 40 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மட்டும் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் 25 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பி.சுதர்ஷன் ரெட்டி மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஆகஸ்ட் 25ம் தேதி கடைசி நாள் என்பதால் அன்று மாலைக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
BJPINDIAAlliancenominationpapersrejectedVice Presidential election
Advertisement
Next Article