For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Vettaiyan திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!

12:38 PM Oct 01, 2024 IST | Web Editor
 vettaiyan திரைப்படத்திற்கு ‘u a’ சான்றிதழ்
Advertisement

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மனசிலாயோ' மற்றும் ‘ஹண்டர் வன்ட்டார்’ பாடல்கள் கடந்த 20-ம் தேதி வெளியாகி கவனம் பெற்றன. இந்த பாடல்கள் தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளன. முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், அபிராமி, ரோகிணி ஆகியோரின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : #NirmalaSitharaman மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை | கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘வேட்டையன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement