For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கவனம் பெறும் #Vettaiyan சப்வே சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ!

03:49 PM Oct 24, 2024 IST | Web Editor
கவனம் பெறும்  vettaiyan சப்வே சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ
Advertisement

வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

சமீபத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காட்சியல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு மாஸ்டர்களின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement