For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Vettaiyan | மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது!

06:20 PM Sep 17, 2024 IST | Web Editor
 vettaiyan   மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது
Advertisement

வேட்டையன் திரைப்படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை நேற்று முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதன் ஒருபகுதியாக நடிகை ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் கதாபாத்திரத்தை பெயரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மஞ்சு வாரியர் வேட்டையன் திரைப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Tags :
Advertisement