Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஜினி நடிக்கும் #Vettaiyan | #MANASILAAYO பாடல் குறித்த புது அப்டேட்!

01:48 PM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன் படத்தின் முதல் பாடலான ‘மனசலாயோ’ பாடலின் க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

கடந்த சில வாரங்களாக இப்படத்தின் டப்பின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசலாயோ’ என்ற பாடலின் க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருந்தார் ஏஆர் ரஹ்மான், அதே போல, கோட் படத்தில் வரும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது,வேட்டையன் படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அல்லது  மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
GnanavelManasilaayoRajinikanthsongVettaiyan
Advertisement
Next Article