Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vettaiyan ஆல்பம் - அப்டேட் கொடுத்த அனிருத்!

03:57 PM Oct 13, 2024 IST | Web Editor
Advertisement

‘வேட்டையன்’ திரைப்படத்தின் முழு ஆல்பமும் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. இப்படம் மூன்று நாட்களில் இந்தியளவில் ரூ.85 கோடியையும், உலகளவில் ரூ.120 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று (அக்.13) விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

https://twitter.com/anirudhofficial/status/1845392242602549402

முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்தின் முழு ஆல்பமும் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Tags :
Albumanirudhcinemamoviemovie updatenews7 tamilRajiniVettaiyan
Advertisement
Next Article