For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கால்நடை மருத்துவ படிப்பு | விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

09:58 PM Jun 20, 2024 IST | Web Editor
கால்நடை மருத்துவ படிப்பு   விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Advertisement

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) மற்றும் பிடெக் படிப்புகளில் 2024-2025 நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 3ம் தேதி தொடங்கியது.   இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்தது.

அதேபோல் அயல்நாடு வாழ் இந்தியா்,  அவா்களின் வாரிசுகள்,  அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா்,  அயல்நாட்டினா் ஆகியோருக்கான இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  நேற்றைய நிலவரப்படி,  கால்நடை மருத்துவ படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்,  நாளையுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement