தொடக்கத்தில் மிகக் குறைவான வசூல் | தடுமாறும் மெர்ரி கிறிஸ்மஸ்...!
மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தின் மீது பார்வையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , பாலிவுட் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு நேற்று வெளியானது மெர்ரி கிறிஸ்மஸ். இந்த திரைப்படம் 2018ல் வெளியான பிரெஞ்சு குறும்படமாக தி பியானோ டியூனர் (The Piano Tunner) எனும் குறும்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் மீது பார்வையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. உண்மையில், மெர்ரி கிறிஸ்மஸ் பாக்ஸ் ஆபிஸில் மிகவும் பலவீனமான தொடக்கத்தைக் கொண்டிருந்தது.
மெர்ரி கிறிஸ்மஸ் அதன் தொடக்க நாளில் ரூ 2.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. படத்தின் வேகம் இப்படியே நீடித்தால் அதிகம் சம்பாதிக்க முடியாது. இதன்மூலம் கத்ரீனாவின் மிகக் குறைந்த ஓபனிங் படமாக மெர்ரி கிறிஸ்மஸ் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாள் வசூலைப் பார்க்கும்போது, பாக்ஸ் ஆபிஸில் அது பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், இந்த படமும் தோல்வி படங்களின் பட்டியலில் சேர்க்கப்படும். தற்போது அனைவரது பார்வையும் வார இறுதி வசூல் மீதே உள்ளது.