For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயின் 'கோட்' திரைப்படம் - அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

07:27 PM Jul 30, 2024 IST | Web Editor
விஜயின்  கோட்  திரைப்படம்   அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
Advertisement

விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘கோட்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்து முடிந்தது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, அண்மையில், ‘கோட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ‘கோட்’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டார். இது 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “கோட் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டாக 3வது பாடல் வெளியிடப்படவுள்ளது” என பதிவிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement