'உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்' - தவெக தலைவர் விஜய்!
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து-நடராசன் ஆகியோரின் நினைவிடம் சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ளது. இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1,076 சதுர அடியில் 8 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவிடத்தை முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ்…
— TVK Vijay (@tvkvijayhq) January 25, 2025
அந்த பதிவில், "உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.