For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இனி மளிகைக் கடைகளில் துப்பாக்கி தோட்டா! எங்கு தெரியுமா?

12:21 PM Jul 12, 2024 IST | Web Editor
இனி மளிகைக் கடைகளில் துப்பாக்கி தோட்டா  எங்கு தெரியுமா
Advertisement

அமெரிக்காவில் மளிகைக் கடைகளில் உள்ள தானியங்கி எந்திரங்களின் மூலம் துப்பாக்கி தோட்டா பெறும் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அங்கு பெரும்பாலான பொதுமக்களிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் உள்ளது.

இந்நிலையில் ஏறக்குறைய அமெரிக்காவில் பெரும்பாலான மக்களிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே வெண்டிங் இயந்திரங்கள் மூலம் உடனுக்குடன் துப்பாக்கிக் தோட்டக்களை பெற்றுக்கொள்ளும் வசதி மளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து, பணத்தை செலுத்தி தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “90நாட்களுக்கும் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ள இந்த இயந்திரத்தில் Facial recognition மூலமும் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி தோட்டாக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களில் உள்ள மளிகை கடைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement