Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vembakottai அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு!

11:52 AM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரைக்கும் நடத்தப்பட்ட அகழாய்வில் சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள், உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் கூறியதாவது:

"முன்னோர்கள் இதனை உணவு அருந்தவோ, மண் பாண்டங்களுக்கு மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம். சமையல் பாத்திரம் உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.

Tags :
Excavationvembakottai
Advertisement
Next Article