கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது #Velankanni திருவிழா..!
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா இன்று (ஆக.29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த கொடியேற்ற நிகழ்வில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த திருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3000 – திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதியும், மறுநாள் அதாவது செப்டம்பர் 7-ஆம் தேதி தேர் பவனியும் நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா கொடியேற்ற விழாவை காண...