Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Velankanni பேராலய பெருவிழா! - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

06:43 AM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Advertisement

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, வெளி மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். கொடியேற்றத்தைக்காண சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், நாகை மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி வேளாங்கண்ணியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் விளக்கினார்.

கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3000 - திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில்
பொதுமக்கள் இறங்காமல் இருக்கவும் குளிக்க தடை விதித்தும் கண்காணிக்க தீவிர
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க சிசிடிவி
கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 6ம் தேதியும், மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர் பவனியும் நடைபெறுகிறது.

Tags :
devoteesfestivalflag hoisting VelankanniVelankannitemple
Advertisement
Next Article