For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வசூல் மன்னன் #ActorVijay - Box Officeல் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்!

09:45 AM Sep 05, 2024 IST | Web Editor
வசூல் மன்னன்  actorvijay   box officeல் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்
Advertisement

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழும் நடிகர் விஜய் நடித்து அதிக வசூலை கொடுத்த திரைப்படங்களை தொகுப்பை காணலாம்....

Advertisement

நடிகர் விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது. தி கோட் திரைப்படம் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியான முதல் திரைப்படமாகும்.

நடிகர் விஜய் என்றாலே பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்று சொல்லும் அளவிற்கு அவரது முந்தைய திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்துள்ளன. தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் படங்களில் ஒரு நல்ல வசூல் எனும் சாதனை நடிகர் விஜய் தற்போதுவரை தக்கவைத்துள்ளார். இன்று வெளியான தி கோட் படமும் பெரும் வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்து வரும் நிலையில் வசூலைக் குவித்த அவரது முந்தைய படங்கள் குறித்து விரிவாக காணலாம்.

வசூலைக் குவித்த நடிகர் விஜய் படங்கள்

1.லியோ (2023)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகி ரூ.620 கோடி வசூல் செய்துள்ளது.


2. வாரிசு
(2023)

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படமான வாரிசு ரூ.280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ.310 கோடி வசூலித்துள்ளது.


3.பீஸ்ட்
(2022)

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் 150 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டது. இதன் வசூல் ரூ.300 கோடி ஆகும்.

4.மாஸ்டர் (2021)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 135 கோடி பட்ஜெட் செலவில் படமாக்கப்பட்டது. இப்படம் ரூ.300 கோடி வசூலை ஈட்டியது

5.பிகில் (2019)
அட்லீ - விஜய் காம்போவில் உருவான 3-வது படம் பிகில். இப்படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடியாகும். இப்படம் ரூ.321 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இந்த படம்தான் ரூ.300 கோடி வசூல் செய்த முதல் விஜய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

6.சர்கார் (2018)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் ரூ.258 கோடி வசூல் செய்துள்ளது.

7. தெறி (2016)
அட்லீ இயக்கத்தில் உருவான தெறி படம் ரூ.72 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் ரூ.168 கோடி வசூல் செய்தது.

8. துப்பாக்கி (2012)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ.137 கோடி வசூல் செய்தது. இதுதான் விஜயின் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்

9. பைரவா (2017)
பரதன் இயக்கத்தில் வெளியான பைரவா திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.70 கோடியாகும். இப்படம் ரூ.115 கோடி வசூல் செய்துள்ளது.

10.கத்தி (2014)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இப்படம் ரூ.134 கோடி வசூலித்துள்ளது.

Tags :
Advertisement