For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது” -திருமாவளவன் குற்றச்சாட்டு!

12:18 PM Mar 17, 2024 IST | Web Editor
“தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது”  திருமாவளவன் குற்றச்சாட்டு
Advertisement

“தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது”  என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

Advertisement

மும்பையில் ராகுல் காந்தியின் 'ஒற்றுமை யாத்திரை' இன்று நிறைவு பெறுகிறது .
இதில் கலந்து கொள்ள மும்பை செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்: கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் தேதி அறிவித்தார்கள். இந்த முறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையர் பதவி விலகி இடங்கள் காலியாக இருந்தன. அதனால் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு வார கால தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடந்த முறையும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகத்தை நடந்தது
போல் இந்த முறையும் இணைத்துள்ளார்கள். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இடைவெளி
மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது தமிழ்நாட்டில் உள்ள பிஜேபி கூட்டணியை அமைக்கவில்லை. அதிமுக கூட்டணி அமைக்கவில்லை .இத்தனை நெருக்கடியான சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் மகாராஷ்டிரா பீகார் உத்தரப் பிரதேசம் போன்ற ஒரே மாநிலங்களில் 3
முதல் 7 கட்ட தேர்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்ட
வாக்குப்பதிவு நடத்துவது இதில் ஏதோ அரசியல் உள்ளீடு இருப்பதை அறிய முடிகிறது.

முதற்கட்ட வாக்கு பதிவிற்கும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவிற்கும் மிகப்பெரிய
இடைவெளி உள்ளது. ஏன் ஏழு கட்ட தேர்தல் ஏன் வாக்குப்பதிவு முடிந்து 45 நாட்கள் எண்ணுவதற்கு இடைவெளி என்பதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ஒரே மாநிலத்தில் ஏழு கட்ட தேர்தல்கள் நடைபெற இருப்பதும் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை.

எதுவாக இருந்தாலும் மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். மக்கள் 100 சதவிகிதம்
வாக்களிக்க வர வேண்டும். இந்த தேர்தல் நாட்டை பாதுகாக்கும் அரசியல் யுத்தத்தைச் சந்திக்கும் தேர்தலாக இருக்கிறது. எனவே வாக்காளர்கள் தான் நாட்டை காப்பாற்றியாக வேண்டும். இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்கு 100% வாக்குப்பதிவு அவசியமானதாக உள்ளது.

47 விழுக்காடு நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளை பணமாக வசூலித்து வைத்திருக்கிறது பாஜக. அவர்கள் தேர்தல் பத்திரங்களின் மூலம் வசூலித்த தொகை 6000 கோடிக்கு மேல் என்று தெரிந்துள்ளது. தேர்தல் பத்திரம் அல்லாமல் கருப்பு பணமாக எத்தனை
ஆயிரம் கோடி வசூலித்து இருப்பார்கள் என்று சிந்திக்க முடிகிறது.

தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்த கார்ப்பரேட் நிறுவனங்களில் அதானி
அம்பானியின் நிறுவனங்கள் இடம் பெறவில்லை. தேர்தல் நன்கொடை தரும் அளவிற்கு
அதானியும் அம்பானியும் பணக்காரர்கள் இல்லையா. அவர்கள் லாபத்தில் இயங்கவில்லையா. என்ற கேள்வி எழுகிறது. இது எல்லாம் அவர்களின் சூதாட்டம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். எந்த நிறுவனங்கள் யாருக்கு எவ்வளவு வழங்கி உள்ளது என்பதை இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என நம்புகிறோம்.

Tags :
Advertisement