Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாரணாசி | பிரதமர் வருகையால் பிரபலமான டீக்கடை!

05:35 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடி கடந்த 2022ம் ஆண்டு வாரணாசி சென்றபோது டீ அருந்திய கடை பிரபலமாகி உள்ளது.

Advertisement

உ.பி. மாநிலம் வாரணாசியில் அஸ்சி கார்ட் பகுதியில் உள்ள டீக்கடை தான் ' பப்பு சாய் கடை'.  இந்த டீக்கடையை மூன்றாவது தலைமுறையாக தாத்தா,  அப்பா தற்போது பேரன் சதீஷ் நடத்தி வருகிறார்.  85 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த டீக்கடையில் ஒரு நாளைக்கு 200 முதல் 500 நபர்கள் வரை வந்து டீ அருந்திவிட்டு செல்கின்றனர்.  கடந்த 2022 ல் வாரணாசி வந்த பிரதமர் மோடி முதல்முறையாக இந்த டீக்கடைக்கு வந்து மூன்று முறை டீ அருந்தினார்.

இவரது கடையில் வாரணாசியில் கிடைக்கும் மற்ற டீயை விட லெமன் டீ சிறப்புமிக்கது. பாய்லர் மூலம் சுடுதண்ணீர் கொதிக்க வைத்து டீத்தூள் மற்றும் புதினா இலைகள், செரிமானத்திற்கு உண்டான பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு டீ தயார் செய்து வழங்கப்படுகிறதாக கூறப்படுகிறது.   பிரதமர் விரும்பி அருந்திய டீக்கடை என்பதால் இக்கடை பிரபலமாகியுள்ளது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சதீஷ் கூறியதாவது,

"பிரதமரின் வருகைக்குப் பிறகு எங்கள் கடை பிரபலமானது.  எங்கள் தாத்தா காலத்தில் இருந்து இந்த கடையை நடத்துகிறோம்.  பிரதமர் எம்பியான பிறகு தான் வாரணாசி வளர்ந்துள்ளது.  மூன்று முறை பிரதமர் மோடி இங்கே தேனீர் அருந்தியுள்ளார்.
பிரதமர் ஒரு முறை பால்டியும்,  இரண்டு முறை லெமன் டீயும் அருந்தினார்
எப்போது வாரணாசிக்கு பிரதமர் வந்தாலும் இங்கு இருந்து தான் அவருக்கு தேநீர் செல்லும்.
இந்த பகுதியில் எங்கள் தேநீர் மிகவும் பிரபலம்" என்றார்.

Tags :
Narendra modiPMO IndiaVaranasi
Advertisement
Next Article