#vandebharat ரயிலை சேதப்படுத்தும் இளைஞர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வந்தே பாரத் ரயிலை சுத்தியலால் இளைஞர் ஒருவர் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வந்தே பாரத் ரயிலை இளைஞர் ஒருவர் சுத்தியலால் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் இந்த மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் இது ரயில் நிலையம் இல்லை என்றும், ரயிலை பழுதுபார்க்கும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரயிலை சேதப்படுத்தியுள்ளதாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!
இதனிடையே ட்ரைன்ஸ் ஆஃப் இந்தியா என்ற எக்ஸ் பக்கத்தில், ஏற்கெனவே பழுதான ஜன்னலை மாற்றுவதற்காக ரயில்வே ஊழியர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட காணொலி இது என்று பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து, கேள்வி எழுப்பிய ஒருவர், ரயில்வே ஊழியர் என்றால் சுத்தியலால் இவ்வளவு வேகமாக உடைக்க வேண்டிய அவசியம் என்ன? அவரின் சீருடை எங்கே? இந்த சம்பவம் ஏன் காணொலியாக பதிவிடப்பட்டது? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். இது எங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத்? உடைக்கப்பட்டதா? அல்லது ரயில்வே ஊழியரின் பழுது பார்க்கும் பணியின் போது எடுக்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு ரயில்வே நிர்வாகத்தின் விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.