#Vandalur | மேம்பாலம் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து - வேடிக்கை பார்த்ததால் நேர்ந்த விபரீதம்!
வண்டலூர் மேம்பாலத்தின் மீது அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வண்டலூர் மேம்பாலம் மீது வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் சென்ற கார் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பின்பக்கம் சேதமடைந்து கண்ணாடி நொறுங்கி கொட்டியது. விபத்துக்குள்ளான 2 வாகனங்களும் சாலையில் நின்று கொண்டிருந்தன.
அப்போது மேம்பாலத்தின் மீது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது மோதியது. இதில் அந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் எகிறி குறித்து உயிர் தப்பினார். மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான நிலையில் அப்பகுதியை கடந்து சென்றவர்கள் விபத்தை வேடிக்கை பார்த்தவாறே சென்றனர்.
விபத்தை வேடிக்கை பார்த்தவாறு சென்றபோது எதிர்திசையில் வந்த கார் ஒன்று முன்னாள் சென்ற சொகுசு கார் மீது மோதியது. இதில் சொகுசு காரின் பின்பக்கம் சேதம் அடைந்த நிலையில் பின்னால் வந்த காரின் முன்பக்கம் முழுவதும் நசிங்கியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோது விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.