Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

11:22 AM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஜுலை 8) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

சேது,  நந்தா,  பிதாமகன்,  நான் கடவுள்,  அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில்,  ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும்,  சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  படப்பிடிப்பு கன்னியாகுமரி,  திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.  இந்த திரைப்படத்தின் போஸ்டர்,  டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது.  இந்த நிலையில், ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஜுலை 8) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Arun VijayB StudiosBalaGV PrakashTrailerTrailer Release DateV House ProductionsVanangaan
Advertisement
Next Article