வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி- அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
வணங்கான் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், மற்றும் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளானர். இப்படத்தினை, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷும், பல பிரபலங்கள் பணிபுரிந்திருக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியாகாது என தகவல் பரவியது. அதை தொடர்ந்து, பொங்கலுக்கு விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால், இதற்கு திரையரங்குகள் கிடைக்காது எனக் கூறப்பட்டது. தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜனவரி 10-ம் தேதி வணங்கான் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு கதைகளை கொண்ட திரைப்படங்கள். எனவே இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த மூன்று படங்களுமே அந்தந்த நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.