வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில்
வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிக்கு
புறப்பட்டு சென்ற வேன், சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு
சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட ஆறு பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து விஜய் என்பவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க வேகமாக வந்த வேன் ஓட்டுநர், வேகத்தடை இல்லாத அருகில் உள்ள எதிர்திசை சாலையில் வேனை வேகமாக திருப்பிய போது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதாக வேனில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.