வள்ளியூர் முருகன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!
வள்ளியூர் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பூஜை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “இறந்தவரின் குடும்பத்தினருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்” – நடிகர் #AlluArjun பேட்டி!
இதனை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகபெருமான் எழுந்தருளி 11 முறை சுற்றி வளம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் தெப்ப திருவிழாவில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.