For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காதலர் தின எதிரொலி - கோயம்பேடு சந்தையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை!

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜாப் பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
10:03 AM Feb 13, 2025 IST | Web Editor
காதலர் தின எதிரொலி   கோயம்பேடு சந்தையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை
Advertisement

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு ரோஜாப் பூக்கள் வரத்து
இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நீலகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு மற்றும் மைசூர் போன்ற பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தையில் ரோஜா பூக்கள் வந்து குவிந்துள்ளன. வழக்கமான நாட்களில் 5 முதல் 7 டன் வரை ரோஜா பூக்கள் கொண்டு வரப்படும்.

தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து 15 டன்
ரோஜா பூக்கள் இறக்கப்பட்டுள்ளன. 20 பூக்கள் கொண்ட ஒரு பண்டல் ரோஜா பூக்கள் ரூ.100 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா ரூ.250 முதல் ரூ. 400 க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா
ரூ.200 முதல் ரூ.350க்கும், ரெட் ரோஸ் ரூ.300 முதல் ரூ. 500க்கும், ஜப்பூரா
ரூ.100 முதல் ரூ.150க்கும், கலர்ரோஸ் ரூ. 200 முதல் ரூ. 400க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை உயரும் என்றும்,
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement