Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

08:40 AM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisement

வைகுண்ட ஏகாதசி பெருநாள் டிசம்பர் மாதம் 23-ம் தேதி துவங்கி ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்களை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே சொர்க்கவாசல் திறக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசித்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய விரும்பும் பக்தர்கள் வசதிக்காக இன்று 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் தேவஸ்தானத்தின் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஆகியவற்றை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியீட உள்ளது.

டிசம்பர் மாதம் 23-ம் தேதி துவங்கி ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை பத்து நாட்களுக்கும் மொத்தமாக 300 ரூபாய் கட்டணம் மதிப்பிலான 2 லட்சத்து 25 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. அதேபோல் இன்று மாலை 3 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாலை 5 மணிக்கு துவங்கி திருப்பதி, திருமலை ஆகிய ஊர்களில் உள்ள தேவஸ்தான தங்கும் அறைகளையும் பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DharshanNews7Tamilnews7TamilUpdatesSpecial TicketTirumalaTirupathiTTDVaikunda Ekadasi
Advertisement
Next Article