For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

07:20 AM Dec 23, 2023 IST | Web Editor
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு   கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

Advertisement

மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும்.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் நேற்று நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெற்று, அதனை தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ஜன. 2-ம் தேதியுடன் நிறைவடையும்.

இந்நிலையில், இன்று (டிச.23) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை மணி 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோயில் அடைக்கப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட
சொர்க்கவாசலில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, உற்சவருடன் சேர்ந்து தேவஸ்தான ஜீயர்கள் அறங்காவலர் குழு தலைவர், நிர்வாக அதிகாரி, தலைமை அர்ச்சகர் ஆகியோர் சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.

இன்று அதிகாலை முதல் நீதிபதிகள், ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமான அளவில் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்து செல்கின்றனர்.

Tags :
Advertisement