For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி!

01:03 PM Mar 08, 2024 IST | Jeni
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு   தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  கூட்டணி, தொகுதி பங்கீடு,  தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொமதேக,  ஐயூஎம்எல், சிபிஐ,  சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில் இன்று திமுக - மதிமுக இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படியுங்கள் : “பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  மற்ற கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் எந்த தொகுதி என்பது பற்றி அறிவிக்கப்படும்.  நேரம் இருக்கிறது. மாநிலங்களவை சீட் வழங்குவது குறித்து பின்னர் பேசப்படும்.  தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement