Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளார்" - துரை வைகோ அறிக்கை!

11:20 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

எழும்பு முறிவு அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்

Advertisement

கடந்த 25ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அப்போது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் பின்னர், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில், இன்று மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் அறிவிப்பு வெளியானது.  இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை பேசி வைகோ வெளியிட்டார்.

அந்த வீடியோ பதிவில் .. "நான் ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன்.

இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வைகோவிற்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதாக அவரது மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர்  நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.அவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் தொண்டர்கள் நலம் விரும்பிகள் வைகோவைச் சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”  துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Tags :
உடல்நிலைதுரை வைகோவைகோHealth Update
Advertisement
Next Article