மாநில வாழ்வாதாரங்களுக்காக தமிழகத்தின் 8 இடங்களில் வைகோ பிரச்சாரம்!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.இதனை தொடர்ந்து, அவருக்கு மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ தமிழகத்தின் எட்டு இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்த விருப்பத்தாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து மதிமுக தலைமையகமான, தாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் எட்டு இடங்களில் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன “ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரச்சார கூட்டங்கள் நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2025 ஆகஸ்டு 9 முதல் 14 ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் , முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, மேகதாது, மீத்தேன் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவைக் குறித்து தூத்துக்குடி,கும்பகோணம்,கம்பம்,திண்டுக்கல் நெய்வேலி ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 18,19 ஆகிய தேதிகளில் திருப்பூர், சென்னை திருவான்மியூர் ஆகிய இடங்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.