ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா! - பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!
நாகை மாவட்டம் ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வைகாசி தீமிதி திருவிழாவில் விரதமிருந்து காப்புகட்டிய பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடியில் பழமைவாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த பூச்சொரிதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு காவடி, மாவிளக்கு, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்த வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று (மே-20ம் தேதி) மாலை நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் சக்தி கரகம் ஊர்வலமாக வந்து விரதமிருந்து காப்புகட்டிய 100 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை - மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
பின்னர், அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்
கவர் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார
பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.