விஜயகாந்த் மறைவுக்கு வராமல் வீட்டிலேயே வடிவேலு அழுதிருக்கலாம்- சரத்குமார்
விஜயகாந்த் மறைவுக்கு வராமல் வீட்டிலேயே வடிவேலு அழுதிருக்கலாம் என சரத்குமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் இரங்கல் கூறினர்.
டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின் பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் இன்று மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,நடிகர் சரத்குமார் மேடையில் பேசுகையில், இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டம் இதில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு. 90 களில் நான் சரிவைச் சந்தித்த போது விஜய்கந்த்திடம் அழைத்து சென்றார்கள் அப்போது படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக மீசை எடுக்க சொன்னார்கள்.
அப்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மீசை எடுத்தேன் தற்போதும் மீசை எடுத்துள்ளேன் ஆனால் இப்படி ஒரு நிகழ்வு. வெளியூரிலிருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை மிகவும் வருந்தினேன். புலன் விசாரணை படத்தில் உங்களுக்கு தான் முதல் பெயர் என்று சொன்னார். இது போல் யாரும் பெருந்தன்மையாகத் தன்னை விட்டு கொடுக்க மாட்டார்கள்.
வடிவேலு வரவில்லை என்ற குற்ற சாட்டுகள் தொடர்ந்து வந்தது. வடிவேலு வராமல் வீட்டிலிருந்து அழுதிருக்கலாம். யாரையும் எதிர்த்துக் குறை கூறுபவர் இல்லை கேப்டன் விஜய காந்த. அதனால் வடிவேலு வீட்டிலிருந்து அலுதிருக்களாம் ஒரு வேளை வந்திருந்தால் திட்டுவார்கள் என்று வடிவேலு நினைத்திருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.