சச்சினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சரத்குமார்!
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஜூலை 4 காம் தேதி 3பிஎச்கே திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு நடுத்தர குடும்பம் சொந்த வீட்டை வாங்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்ற கதைகளத்தை கொண்ட இப்படம் பேசியிருந்தது. மேலும் ஆகஸ்ட் முதல் வாரம் இப்படம் ஓடிடியிலும் வெளியானது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3பிஎச்கே படத்தை பார்த்து ரசித்ததாக தெரிவித்திருந்தார். ரெடிட் தலத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த சச்சின் சமீபத்தில் 3 பிஎச்கே மற்றும் அட தம்பாய்ச்சா நாய் ஆகிய திரைப்படங்களை ரசித்தாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் சரத் குமார் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிகவில்,
”அன்புள்ள சச்சின், எங்கள் தமிழ் திரைப்படமான 3bhk-ஐப் பாராட்டியதற்கு நன்றி
3bhk திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் இந்த அங்கீகாரத்திற்காக மகிழ்ச்சியடைகிறார்கள்”
என்று தெரிவித்துள்ளார்.