For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வடலூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

11:14 AM May 07, 2024 IST | Web Editor
வடலூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு
Advertisement

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர் வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள்.  அவர் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம் கடலூர் மாவட்டம்,  வடலூரில் அமைந்துள்ளது.  இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.  இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் ஞானசபை அருகே சுமார் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க  சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.  இதனிடையே அந்த பகுதியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர் சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த எதிர்ப்புகளை மீறி தமிழ்நாடு அரசு கட்டுமான பணியை தொடங்கியது.

இந்த நிலையில், வடலூரில் பழங்கால கட்டிடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து,  3 பேர் கொண்ட தொல்லியல் துறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.  அவர்கள் வடலூரில் சத்திய ஞான சபை முன்பு பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement