பாலமேடு ஜல்லிக்கட்டோடு பாய்ந்துவந்த ‘வாடிவாசல்’ அப்டேட்!
நடிகர் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகளை தொடங்கவில்லை.
இந்த நிலையில், வாடிவாசல் படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
மதுரை பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து வாடிவாசல் படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வாடிவாசல் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.