For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#UttarPradesh | யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த இருவர்... தட்டி தூக்கிய போலீசார்!

11:09 AM Nov 10, 2024 IST | Web Editor
 uttarpradesh   யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த இருவர்    தட்டி தூக்கிய போலீசார்
Advertisement

உத்தர பிரதேசத்தில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கள்ளநோட்டுக்களை அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.500 கள்ளநோட்டுகளை ( 20 நோட்டுகள்) போலீசார் கைப்பற்றினர். அனைத்து ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சிட்டு வந்த இவர்கள் யூடியூப் வீடியோக்களை பார்த்து கள்ளநோட்டுகளை அச்சிட கற்றுக்கொண்டுள்ளனர். கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்துள்ளனர்.

அவர்கள் மிர்சாபூரில் இருந்து முத்திரைத்தாள் வாங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 30,000 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். யூடியூப் பார்த்து கள்ளநோட்டுக்களை அச்சடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement