#Uttarpradesh | பாஜகவினர் தலித் பெண்ணை தாக்கியதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதரவாளர்கள் ஒரு தலித் பெண்ணைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, தலையை மொட்டையடித்தனர் என வைரலாகிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ (இங்கே மற்றும் இங்கே) தலையில் இருந்து ரத்தம் வழியும் ஒரு பெண்ணின் கைகளைப் பிடித்து இரண்டு ஆண்கள் அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. அந்த பதிவில், “பாஜக ஆதரவாளர்கள் ஒரு தலித் பெண்ணைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, தலையை மொட்டையடித்தனர்” என பகிரப்பட்டு வருகிறது. வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மையைச் சரிபார்ப்பை காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களின் தலைகீழ் படத் தேடல் செய்ததில், 12 நவம்பர் 2024 தேதியிட்ட அதே வைரல் வீடியோவைக் கொண்ட ட்விட்டர் (எக்ஸ்) இல் ஒரு சமூக ஊடக பதிவு கண்டறியப்பட்டது. அந்த பதிவின் தலைப்பு, “கன்னோஜ், மதோநகரில் ஒரு கண்காட்சியில் ஊஞ்சல் குழாயில், 13 வயது அனுராதா கத்தேரியாவின் தலைமுடியில் சிக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அவர் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவின் குறிப்பிலிருந்து முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடப்பட்டது. அதில், வைரல் வீடியோவை போல பல செய்தி அறிக்கைகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) கண்டறியப்பட்டன. அந்த செய்தி அறிக்கைகளின்படி, “நவம்பர் 9, 2024 அன்று, உத்தரபிரதேசத்தின் கன்னோஜ், மதோநகர் கிராமத்தில் நடந்த கண்காட்சியில் 13 வயதான அனுராதா கத்தேரியா பலத்த காயமடைந்துள்ளார். அவரது தலைமுடி ஸ்விங் ரோலரில் சிக்கி, உச்சந்தலையை கிழித்துவிட்டது. நேரில் பார்த்தவர்கள் ஊஞ்சலை நிறுத்த விரைந்தனர். ஆனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்“. ஸ்ரீ ஸ்ரீ 1008 சுவாமி நித்யானந்தா சேவா சமிதி ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியில் பூஜை விழாக்கள் மற்றும் ஊஞ்சல் சவாரிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
சுருக்கமாக, உத்தரபிரதேசத்தில் ஸ்விங் ரோலரில் ஒரு சிறுமியின் உச்சந்தலையில் காயம்பட்ட வீடியோ, தலித் பெண்ணைத் தாக்கியதாக தவறாகப் பகிரப்படுகிறது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.