உத்தராகண்ட் மேக வெடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!
உத்தராகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த இயற்கை சீற்றத்தால், சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்கு உடனடியாக இந்த நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும் தொடங்கியுள்ளன. அரசு தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.